» சினிமா » செய்திகள்

சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!

செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)

பிரபல இந்தித் தொலைக்காட்சித் தொடர் நடிகையான சஞ்சிதா உகாலே (22) மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான ‘கும்கும் பாக்யா’, ‘தில்வாலி துல்ஹா லே ஜாயேகி’ மற்றும் ‘க்ரைம் பேட்ரோல்’ உள்படப் பல முன்னணிச் சின்னத்திரைத் தொடர்களில் நடித்துத் பிரபலமானவர் இளம் நடிகை சஞ்சிதா உகாலே. இவர் மும்பை நகரின் அருகிலுள்ள நலசோபரா பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று சஞ்சிதா உகாலே தனது வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த உள்ளூர் போலீசார், சஞ்சிதா உகாலேவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையின்படி இது தற்கொலை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போலீசார், அவர் எதற்காக இந்த அதிரடி முடிவை எடுத்தார், தற்கொலைக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

22 வயதே ஆன இளம் இந்தி நடிகை சஞ்சிதா உகாலேவின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் சின்னத்திரை உலகினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory