» சினிமா » செய்திகள்
சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

"ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையையும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் தவெக வெற்றி உடைத்திருக்கிறது.” என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். அதற்கான விஷயங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியமைக்க கூடிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சில கட்சிகள் தவெக உடன் கூட்டணி அமைத்து விஜய் முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிகிறது.
இதனிடையே தமிழக தேர்தலில் தவெக பெற்றியுள்ள வெற்றி குறித்து இயக்குநர் பா.ரஞ்சித், "சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையையும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள்” என்று பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

