» சினிமா » செய்திகள்

கோலாலம்பூரில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா!

சனி 22, நவம்பர் 2025 10:45:31 AM (IST)



நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி அண்மையில் வெளியாகி அசத்தலான வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.

அதேநேரம், பாடலின் இறுதியில் அனிருத், விஜய்யிடம் ‘கடைசியா ஒரு டான்ஸ்..’ எனக் கேட்கிறார். அதற்கு விஜய் சரி என்கிறார். இந்த வசனம் இனி விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பதையே குறிப்பதால் அவரது ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிகழ்வில் விஜய், எச். வினோத், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதால் ஏராளமான தமிழர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்!

செவ்வாய் 25, நவம்பர் 2025 11:45:20 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory