» சினிமா » செய்திகள்
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)
தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் என்.டி.ஆர், அமிதாப், ரஜினி, மம்மூட்டி படங்கள் உள்பட ஆயிரம் திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "14 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். "தேவுடு சேசினா பெல்லி” என்ற தெலுங்கு படத்தில் பார்வையற்ற சிறுவனாக நடித்தேன். மூத்த நடிகர்களுடனும் அதில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது அது அவ்வளவு எளிதானதல்ல. என் பெற்றோர் அப்போது எனக்குச் சொன்னது, ‘இயக்குநரின் நடிகனாக இரு’ என்பதைத்தான்.அதை இப்போதுவரை பின்பற்றி வருகிறேன். என் பெற்றோர் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர்களாக இருந்ததால் 1973- ம் ஆண்டிலேயே டப்பிங் வேலையை தொடங்கிவிட்டேன். தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ் போன்ற ஜாம்பவான்களுக்கு டப்பிங் பேசினேன். விஷ்ணுவர்தன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், அமிதாப் பச்சன், சில்வெஸ்டர் ஸ்டலோன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுக்கு அவர்கள் படங்களின் தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசியிருக்கிறேன்.
சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற தெலுங்கு நட்சத்திரங்களுக்கு, அவர்களின் தமிழ்ப் பதிப்புகளுக்கு நானே டப்பிங் பேசினேன்.50 ஆண்டுகளுக்குப் பிறகும், எனக்கு இன்னும் அதிக ஏக்கம் இருக்கிறது. தேசிய விருதை வெல்ல விரும்புகிறேன், ஆஸ்கர் விருதையும் வெல்ல விரும்புகிறேன். பாகுபலி, கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற பெரிய படங்களின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லை'' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

