» சினிமா » செய்திகள்
நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகை நமீதாவும், அவரது கணவர் வீராவும் இணைந்து புதிய நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளனர். இந்த பயிற்சி பள்ளியின் துவக்க விழாவில் நடிகரும், பா.ஜ.க. நிர்வாகியுமான சரத்குமார் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-"இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனவே நடிகர்களும் அரசியலுக்கு வரலாம், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அரசியலிலும் நடிக்கக் கூடாது. அங்கு உண்மையாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வருபவர்களின் தகுதி, அவர்கள் பேசும் விஷயங்கள், அவர்கள் என்ன செய்வதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்? அதை செயல்படுத்தும் திறமை அவர்களுக்கு உள்ளதா? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது.” இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட மாஸாக இருக்கும்: சுராஜ் வெஞ்சரமுடு நெகிழ்ச்சி
செவ்வாய் 3, மார்ச் 2026 12:40:27 PM (IST)

எஸ்டிஆர்-51 திரைப்படத்தில் மீண்டும் இணையும் மெகா கூட்டணி: சிலம்பரசன் - சந்தானம் காம்போ!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:47:29 AM (IST)

மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
ஞாயிறு 1, மார்ச் 2026 1:47:42 PM (IST)

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!!
வியாழன் 26, பிப்ரவரி 2026 3:50:46 PM (IST)

சினிமாவில் சிலரே எனக்குத் தடையாக இருக்கின்றனர்: சிவகார்த்திகேயன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:51:40 PM (IST)

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான்: ஹம்பியில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:41:15 PM (IST)

