» சினிமா » செய்திகள்
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது. கோவாவில் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு.
‘ஜெயிலர் 2’ படத்தில் முதல் பாகம் தவிர்த்து சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட சிலரும் அடங்குவர். அவர்களது வரிசையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலும், கோவாவிலும் படமாக்கவுள்ளார்கள்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் மனைவியாக கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யா பாலன். தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தாலும், சமீபத்தில் அவருடைய தென்னிந்திய ரீல்ஸ் இணையத்தில் ட்ரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

