» சினிமா » செய்திகள்
மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு சூரி அறிவுரை : வைரமுத்து பாராட்டு!
சனி 17, மே 2025 12:53:54 PM (IST)

மாமன் திரைப்படம் வெற்றிபெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் சூரியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என சூரியின் மதுரை ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிட்டனர். இது சூரி கண்ணில் பட அவர்களை கண்டித்தும் வருத்தம் தெரிவித்தும் பேசியுள்ளார். அதில் அவர் "தம்பீங்களா இது ரொம்ப முட்டாள்தனம். எங்கேயோ இருந்துட்டு நாம இப்படி பண்ணுனா என் காதுக்கு வரும் என்னை இம்ப்ரஸ் பண்ணலாம்ன்னு அல்லது படம் நல்லா வரணும்னு நீங்க இப்படி பண்ணி இருக்கலாம். ஆனால் ஒரு படம் நல்லா இருந்தா மக்களுக்கு பிடிக்கும், அந்த படம் நல்லா ஓடும். அதை விட்டுட்டு மண் சோறு சாப்டா எப்படி படம் ஓடும்? இது ரொம்ப வேதனையா இருக்கு." என கூறியுள்ளார்.
சூரியின் இந்த கருத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து அவரது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர்
"திரைக்கலைஞர்
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும்
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்
தங்கள் ரசிகர் கூட்டத்தை
இப்படி நெறிப்படுத்தி
வைத்திருந்தால்
கலையும் கலாசாரமும்
மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்
மண்சோறு தின்றால் ஓடாது
மக்களுக்குப் பிடித்தால்
மாமன் ஓடும்
பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை
'பலே பாண்டியா'
என்று பாராட்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: திலீப் சுப்பராயன் விளக்கம்
சனி 26, ஜூலை 2025 4:00:13 PM (IST)

ஆக.2ல் ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழா!
சனி 26, ஜூலை 2025 11:59:02 AM (IST)

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு: சேரன் இயக்கத்தில் அய்யா!!
வெள்ளி 25, ஜூலை 2025 12:29:05 PM (IST)

இளையராஜா பாடல் காப்புரிமை விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 24, ஜூலை 2025 3:42:42 PM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் : சாம் சி.எஸ் தகவல்!!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:45:26 PM (IST)

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு: உறுதிபடுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்!
சனி 19, ஜூலை 2025 5:09:16 PM (IST)
