» சினிமா » செய்திகள்
பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)
பிரமாணர் சமூகம் குறித்து மோசமாகப் பேசிய கருத்துக்களுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது தொடர்பாக, "கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. இன்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள்.
இப்படிச் சொன்னதன் மூலம், நானே என் சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து விலகிவிட்டேன். இந்த சமூகத்திடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் யாரோ ஒருவரின் மலிவான கருத்துக்கு பதிலளிக்கும் போது கோபத்தில் அதை எழுதினேன். நான் பேசும் விதம் மற்றும் அவதூறான வார்த்தைகளுக்காக எனது நண்பர்கள், என் குடும்பத்தினர் மற்றும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது இது மீண்டும் நடக்காமல் இருக்க, என் கோபத்தை நான் சரி செய்வேன். இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)

மீண்டும் தொடங்குகிறதா இந்தியன் 3? - இயக்குநர் ஷங்கரின் அதிரடி முடிவு!
புதன் 11, மார்ச் 2026 4:28:59 PM (IST)

தணிக்கையில் தொடரும் இழுபறி: ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:14:13 PM (IST)

விஜய் - திரிஷா விவகாரம்: இயக்குநர் பார்த்திபனின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை!
செவ்வாய் 10, மார்ச் 2026 11:10:17 AM (IST)

பேயை விட ஏஐ-யைப் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது : நடிகர் சந்தானம் கலகல பேச்சு!!
ஞாயிறு 8, மார்ச் 2026 1:30:36 PM (IST)

ஹாரர் - சயின்ஸ் பிக்சன் : ரைசா வில்சன் நடிக்கும் நோவா!
வியாழன் 5, மார்ச் 2026 12:08:49 PM (IST)

