» சினிமா » செய்திகள்
இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல் : பிரபல நடிகை கைது!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:54:30 PM (IST)
வங்கதேசம் - சவுதி அரேபியா இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரபல வங்கதேச நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உருவ கேலி: யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:41:03 PM (IST)

அனைவருக்கும் மறக்க முடியாத படமாக காந்தா இருக்கும் : துல்கர் சல்மான் நம்பிக்கை
வெள்ளி 7, நவம்பர் 2025 3:38:50 PM (IST)

மீண்டும் இணையும் ரஜினி - சுந்தர்.சி காம்போ: கமல்ஹாசன் அறிவிப்பு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:17:28 AM (IST)

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

