» சினிமா » செய்திகள்
ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

ஸ்லோ மோஷன் இல்லை என்றால் ரஜினிகாந்த் என்ற நடிகர் இல்லை என பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா விமர்சித்து பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ராம் கோபால் வர்மா கொடுத்த பேட்டியில், "ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
ஸ்லோ மோஷன் மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:31:51 AM (IST)

ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:35:06 PM (IST)

தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தி படம்: பைசன் குறித்து மாரி செல்வராஜ்..!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:44:24 AM (IST)

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் இயக்குநர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்
சனி 11, அக்டோபர் 2025 4:11:49 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)
