» சினிமா » செய்திகள்
நந்தா படம் எனது வாழ்க்கையையே மாற்றியது: நடிகர் சூர்யா
வெள்ளி 20, டிசம்பர் 2024 8:12:08 PM (IST)
பாலா இயக்கிய நந்தா படம் எனது வாழ்க்கையையே மாற்றியது. நந்தா இல்லா விட்டால் எனக்கு இந்த அடையாளம் கிடைத்து இருக்காது என நடிகர் சூர்யா பேசினார்.

இதில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசும்போது, "நான் 2000-ம் ஆண்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது பாலா என்னை போனில் அழைத்து நந்தா படத்தில் நடிக்க வைத்தார்.
நந்தா படம் எனது வாழ்க்கையையே மாற்றியது. பாலா இயக்கிய சேது படம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து வெளியே வர 100 நாட்கள் ஆனது. இப்படி ஒரு நடிகரால் நடிக்க முடியுமா? ஒரு இயக்குனரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆனால் அவரது இயக்கத்திலேயே நந்தா படத்தில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நந்தா படத்தை பார்த்து விட்டு காக்க காக்க படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைத்தார். காக்க காக்க படத்தை பார்த்து விட்டு ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தில் நடிக்க அழைத்தார். நந்தா படம் இல்லா விட்டால் எனக்கு இந்த அடையாளம் கிடைத்து இருக்காது. பாலாவை அண்ணன் என்று தான் அழைப்பேன்'' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எங்களது திருமண முறிவுக்கு மூன்றாவது நபரே காரணம்: ஆர்த்தி ரவி விளக்கம்!
செவ்வாய் 20, மே 2025 3:47:38 PM (IST)

நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அதிருப்தி!
செவ்வாய் 20, மே 2025 11:26:07 AM (IST)

சாய் தன்ஷிகாவுடன்: திருமணம் விஷால் அறிவிப்பு
செவ்வாய் 20, மே 2025 11:10:09 AM (IST)

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா: பூஜையுடன் தொடக்கம்!
திங்கள் 19, மே 2025 3:54:51 PM (IST)

சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார்: ஏ.ஆர். முருகதாஸ்
சனி 17, மே 2025 5:21:49 PM (IST)

மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களுக்கு சூரி அறிவுரை : வைரமுத்து பாராட்டு!
சனி 17, மே 2025 12:53:54 PM (IST)
