» சினிமா » செய்திகள்
தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியல்!
வியாழன் 24, அக்டோபர் 2024 10:38:41 AM (IST)

இந்த ஆண்டு 'தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர் உட்பட பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், ஆயுத பூஜை போன்ற முக்கிய விழா நாட்களை குறி வைத்து பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தபோதிலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு பல படங்கள் திரைக்கு வர உள்ளன. தற்போது, அந்த பட்டியலை காணலாம்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். 'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
'பிரதர்'
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் 'பிரதர்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானநிலையில், வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றன. இப்படம் வரும் 31 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர், டிமான்ட்டி காலனி 2, பிளாக் படங்களின் வெற்றியைத்தொடர்ந்து, ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் 'ஜீப்ரா' படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தில், சத்யராஜ், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நிதிக்குற்றத்தைப் பற்றி பேசும் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வருகிற 31ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
கேஜிஎப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்துள்ள ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'பஹீரா' படம் உருவாகியுள்ளது. இயக்குனர் டாக்டர் சூரி இயக்கியுள்ள இப்படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். கன்னடாவில் கண்டி,உக்ரம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி. இந்தப் படம் வரும் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது.
சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கா'. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது.
பூல் பூலைய்யா படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, இப்படத்தின் 3-ம் பாகம் வெளியாகவுள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஆர்யன் நடித்துள்ளார். இப்படம் தீபாவளுக்கு அடுத்த நாள் அதாவது நவம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைதொடர்ந்து அந்தப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் சிங்கம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். பின்னர் இதன் இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தையும், அஜய் தேவ்கனை வைத்து இயக்கினார் ரோஹித் ஷெட்டி. இந்த நிலையில் ரோஹித் ஷெட்டி தற்போது மீண்டும் 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இதில் கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் தீபாவளுக்கு அடுத்த நாள் அதாவது நவம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பின்வாங்கியது தனுஷின் இட்லி கடை : அக்.1ல் ரிலீஸ்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:03:45 PM (IST)

வடிவேலு - ஃபஹத் ஃபாசிலின் ‘மாரீசன்’ ஜூலை ரிலீஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 3:38:10 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் டிரெய்லர் வெளியானது
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:48:24 PM (IST)

ஜன நாயகன் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:05:58 PM (IST)

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் - வேல்முருகன்
திங்கள் 31, மார்ச் 2025 8:35:45 PM (IST)

பாெங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் - விஜய் படங்கள் மோதல்?
செவ்வாய் 25, மார்ச் 2025 3:50:05 PM (IST)
