» சினிமா » செய்திகள்
எனது விவகராத்தில் கெனிஷாவை இழுக்காதீர்கள்: ஜெயம் ரவி ஆவேஷம்!
சனி 21, செப்டம்பர் 2024 4:39:58 PM (IST)
எனது விவாகரத்து விவகராத்தில் பாடகி கெனிஷாவை இழுக்காதீர்கள் என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் கிளம்பியிருந்தன. இந்ந்லையில் பிரதர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வந்திருந்த ஜெயம் ரவியிடம் பத்ரிகையாளர்கள் இது குறித்து கேள்வியை முன்வைத்தனர்.
அதற்கு ஜெயம் ரவி பேசியதாவது: நான் ஒன்றேயொன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு. கெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார்கள். தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிரைக் காப்பாற்றிய ஹுலர் (குணப்படுத்துபவர்). சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள்.
நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹுலிங் சென்டர் (குணப்படுத்தும் மையம்) அமைக்கவிருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாரும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் அவரை இழுக்காதீர்கள் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)

பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)
