» சினிமா » செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்: ரஜினி, விஜய் வாழ்த்து!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:06:22 PM (IST)



பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: "மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் விஜய் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory