» சினிமா » செய்திகள்
பொங்கல் ரேசில் கமல், அஜித் படங்கள்!
வியாழன் 12, செப்டம்பர் 2024 3:32:13 PM (IST)

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப், அஜித் குமாரின் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களாக உள்ளன. தக்லைப் படத்தை மணி ரத்னம் இயக்குகிறார். இந்த படத்தில் கமல், 38 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இருவரும் விடாமுயற்சி இணைந்து இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சிம்பு, நாசர், அசோக் செல்வன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கும். குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். ஆனால் விடாமுயற்சி பட வேலைகள் எதிர்பார்த்த நாட்களுக்குள் முடியாததால் பொங்கலுக்கு வெளியிட ஆலோசிக்கிறார்கள். மகிழ் திருமேனி இயக்கி உள்ள இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர். விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசானால் குட் பேட் அக்லி கோடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)
