» சினிமா » செய்திகள்
ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் பாடல் செப்.9ல் வெளியீடு!
சனி 7, செப்டம்பர் 2024 12:36:03 PM (IST)

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனிடையே, நேற்று (செப்.6) முதல் ‘வேட்டையன்’ பணிகள் முடிவடையாத காரணத்தில் பட வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என தகவல் பரவியது. இதனால் அதே தேதியில் ‘கங்குவா’ வெளியாக கூடிய சூழல் உருவானது.
இந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றினை ‘வேட்டையன்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என குறிப்பிட்டு வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், அனிருத் இசையமைப்பில் ‘மனசிலாயோ’ என்ற முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் எனவும் ‘வேட்டையன்’ படக்குழு தெரிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது ‘வேட்டையன்’.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)

மீண்டும் தொடங்குகிறதா இந்தியன் 3? - இயக்குநர் ஷங்கரின் அதிரடி முடிவு!
புதன் 11, மார்ச் 2026 4:28:59 PM (IST)

தணிக்கையில் தொடரும் இழுபறி: ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:14:13 PM (IST)

விஜய் - திரிஷா விவகாரம்: இயக்குநர் பார்த்திபனின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை!
செவ்வாய் 10, மார்ச் 2026 11:10:17 AM (IST)

பேயை விட ஏஐ-யைப் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது : நடிகர் சந்தானம் கலகல பேச்சு!!
ஞாயிறு 8, மார்ச் 2026 1:30:36 PM (IST)

ஹாரர் - சயின்ஸ் பிக்சன் : ரைசா வில்சன் நடிக்கும் நோவா!
வியாழன் 5, மார்ச் 2026 12:08:49 PM (IST)

