» சினிமா » செய்திகள்
கேரவனில் நடிகைகளை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்கள்; ராதிகா பகீர் தகவல்!
சனி 31, ஆகஸ்ட் 2024 5:25:05 PM (IST)
கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து நடிகர்கள் செல்போனில் ரசிப்பதாக நடிகை ராதிகா பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால், உள்ளிட்ட பிரபல நடிகர்கள் திரைப்பட சங்க பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.
இந்நிலையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கேரள திரையுலகில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை தற்போது வெளிக்கொணர்ந்துள்ளார். கேரள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை அவர் கூறி உள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் கூறி இருப்பதாவது:
கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன்.
படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு. இன்று சில நடிகைகள் எங்களுக்கு எந்த சம்பவமும் இதுபோன்று நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. அவர்களுக்கு நடந்தது என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் : இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!
திங்கள் 14, ஜூலை 2025 10:28:48 AM (IST)

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)
