» சினிமா » செய்திகள்
வீடுபுகுந்து பெண்ணை மிரட்டியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்
திங்கள் 1, ஏப்ரல் 2024 12:48:57 PM (IST)
வீடுபுகுந்து பெண்ணை மிரட்டியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்தபோது அது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் இருத்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவியை வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவி சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை சரண்யா மீது புகார் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

