» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் ஃப்ளெமிங், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அதன் பின்னர், 2009 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து அப் பொறுப்பில் நீடித்து வந்தார். இந்திய பிரீமியர் லீக் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகாலக் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றதுடன், 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகள் வரை சென்றுள்ளது.
கடந்த மூன்று சீசன்களாகப் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தடுமாறி வருகின்றது. ஐபிஎல் ஏலத்தில் தகுதியான வீரர்களைத் தேர்வு செய்யாதது, போட்டிகளில் சரியான வீரர்களைக் களமிறக்கத் தவறியது, மோசமான விளையாட்டு உத்தி போன்ற காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் ஃப்ளெமிங்கிற்கு எதிராக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இச் சூழலில், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இடையே நடைபெற்ற வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு, அவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகச் சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

உலகக் கோப்பையில் ஸ்பெயின் வரலாற்றுச் சாதனை : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது!
சனி 11, ஜூலை 2026 12:29:27 PM (IST)

இந்திய அணியின் பேட்டிங் வீழ்ச்சி: டி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
வெள்ளி 10, ஜூலை 2026 4:31:49 PM (IST)


