» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்: இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:18:58 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இறுதி போட்டியில் இந்தியாவுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் - வங்க தேசம் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் சாஹிப்ஸாதா ஃபா்ஹான் 4 ரன்களுக்கும், சயிம் அயுப் ரன்னின்றியும் வெளியேறினா்.
ஃபகாா் ஜமான் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஹுசைன் தலத் 3, கேப்டன் சல்மான் அகா 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தனா். முகமது ஹாரிஸ் ஸ்கோரை நிதானமாக உயா்த்த, ஷாஹீன் அஃப்ரிதி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஹாரிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு வெளியேற்றப்பட, முகமது நவாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ஃபஹீம் அஷ்ரஃப் 14, ஹாரிஸ் ரௌஃப் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது 3, மெஹெதி ஹசன், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து, 136 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், ஷமிம் ஹுசைன் 2 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். சைஃப் ஹசன் 18, மஹெதி மஹெதி ஹசன் 11, நூருல் ஹசன் 16, தன்ஸிம் ஹசன் சகிப் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
பா்வேஸ் ஹுசைன் 0, தௌஹித் ஹிருதய் 5, கேப்டன் ஜாகா் அலி 5, தஸ்கின் அகமது 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா். ஓவா்கள் முடிவில் ரிஷத் ஹுசைன் 16, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் தலா 3, சயிம் அயுப் 2, முகமது நவாஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)

இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதா்பா சாம்பியன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:41:29 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 6, அக்டோபர் 2025 8:29:53 AM (IST)

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
சனி 4, அக்டோபர் 2025 4:22:32 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!!
சனி 4, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)

ஆமதாபாத் வெஸ்ட் : கேஎல் ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:21:42 PM (IST)
