» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த வாஷிங்டன் சுந்தர்..!
திங்கள் 14, ஜூலை 2025 11:55:13 AM (IST)

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர்புதிய சாதனை படைத்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தனது அபார பந்துவீச்சால் புதிய சரித்திரம் படைத்துள்ளார். அவரது துல்லியமான சுழற்பந்துவீச்சால் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், இந்திய அணிக்கு 193 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நான்காம் நாளில் தனது திறமையை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர், 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது, இந்த நூற்றாண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இதற்கு முன், 2007-ல் அனில் கும்ப்ளே 84 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜோ ரூட், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் மற்றும் ஷோயிப் பஷீர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் சரிவுக்கு சுந்தர் வித்திட்டார். மேலும், 51 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளரின் நான்காவது சிறந்த பந்துவீச்சாக இது பதிவாகியுள்ளது.
சுந்தரின் சிறப்பான பந்துவீச்சுடன், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தற்போது இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவைப்படுகிறது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இருப்பினும், வாஷிங்டன் சுந்தரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பந்துவீச்சு, போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது. இந்திய அணி 4 விக்கெட் இழந்துள்ள நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் மேலும் அதிக விக்கெட்களை இழக்காமல் பொறுப்பாக ஆடினால் வெற்றி பெறலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய கோப்பை டி.20 தொடர்: இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
புதன் 3, செப்டம்பர் 2025 5:37:17 PM (IST)

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)
