» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தோனி: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:24:10 PM (IST)

ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐசிசி-யின் பெருமைமிகு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு என் வாழ்த்துகள். ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐபிஎல் கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.
உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள். உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே 'Thala For a Reason' என்ற புகழுரை ஓயாது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனியின் தலைமை பண்பு, விளையாடும் விதம் பல கோடி கிரிக்கெட் பிரியர்களை ஊக்கப்படுத்தி உள்ளது. இந்திய அணியின் வீரராகவும், கேப்டனாகவும் உங்கள் பயணம் விளையாட்டின் வரலாற்றில் பொறிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)

இரு இன்னிங்சிலும் சதம்... ரிஷப் பண்ட் சாதனை!
செவ்வாய் 24, ஜூன் 2025 10:09:43 AM (IST)
