» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:32:06 PM (IST)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), ஆடவர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, அனில் கும்ப்ளேவுக்கு பின், 2021ல் முதன் முதலாக, கங்குலி (52) நியமிக்கப்பட்டார். அவர், நடப்பு ஆண்டிலும் அந்த கமிட்டிக்கு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமிட்டியின் உறுப்பினர்களாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மணன், ஆப்கானிஸ்தான் வீரர் ஹமித் ஹசன், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டெஸ்மான்ட் ஹெயின்ஸ், தென் ஆப்ரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் டெம்பா பவுமா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜோனாதன் ட்ராட் ஆகியோர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory