» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பஞ்சாப் வீரர் ஆர்யா அதிரடி சதம் : சென்னை அணி தொடர்ச்சியாக 4வது தோல்வி
புதன் 9, ஏப்ரல் 2025 11:29:54 AM (IST)

ஐபிஎல் நடப்பு தொடரில், பஞ்சாப் வீரர் ஆர்யா சதம் விளாச, சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை பதிவு செய்தது.
ஐபிஎல் 18வது தொடரின் 22வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப், பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக, பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் ரன் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன், மார்கஸ் ஸ்டோய்னிசை 4 ரன், நேஹால் வதேரா 9 ரன், கிளென் மேக்ஸ்வெல் 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் சென்னை பந்து வீச்சை வெளுத்து வாங்கிய ஆர்யா, 42 பந்துகளில், 9 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 103 ரன் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த மார்கோ ஜேன்சனும் ஷசாங்க்கும் தொடர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப், 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. ஷசாங்க் சிங் 52 , ஜேன்சன் 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
220 ரன் இலக்குடன் சென்னை அணி வீரர்கள் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா, கன்வே நிதனமாக விளையாடினர். ரச்சின் ரவீந்திரா 36 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் 1 ரன்னில் நடையை கட்டினார். தொடர்ந்து, ஷிவம் துபே, கன்வே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், துபே 42 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனி அதிரடி காட்டினார். மறுமுனையில் நிதனமாக விளையாடி கன்வே ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே தோனி ஆட்டமிழக்க 20 ஓவரில் முடிவு 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. ஜடேஜா 9 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் லோக்கி பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
புதன் 16, ஏப்ரல் 2025 12:36:11 PM (IST)

ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:32:06 PM (IST)

இனி பேட் அளவு கண்காணிக்கப்படும் : பிசிசிஐ அறிவிப்பு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:20:47 PM (IST)

லக்னோ அணியை வீழ்த்தியது சென்னை :தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:27:09 AM (IST)

அபிஷேக் சர்மா அதிரடி சதம்: 246 ரன்கள் இலக்கை விரட்டி ஹைதராபாத் வெற்றி!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:29:00 PM (IST)

சென்னை அணி தொடர்ச்சியாக 5வது தோல்வி: பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கல்!
சனி 12, ஏப்ரல் 2025 11:13:21 AM (IST)
