» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
வியாழன் 30, அக்டோபர் 2025 11:16:53 AM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இயக்க வேண்டும் வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் எம். பிரமநாயகம் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி-சென்னை முத்துநகர் விரைவு ரயிலில் எப்போதும் நீண்ட காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதைத் தவிர்க்க, தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்களைத் தினமும் இயக்க வேண்டும்.
ரயில் எண். 16765-16766 தூத்துக்குடி-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும். ரயில் எண். 22101-22102 மதுரை-லோகமான்ய திலக் விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
M BabuOct 30, 2025 - 06:36:38 PM | Posted IP 162.1*****
yen normal train vitta makkal poga maten nu solrangala vande bharath ticjet price yevlo ?summa name varanum nu yethum senja pothuma nalathu seiyanum 200 la pora oruku 2000 kuduthu ponuma?
JohnOct 30, 2025 - 06:26:36 PM | Posted IP 172.7*****
மதுரை வரை கணக்கிட்டால் காலை சென்னையில் இருந்து வந்தேபாரத், தேஜஸ் எதிர்திசையில் திருநெல்வேலி சென்னை VB, வைகை மாலையில் சென்னையில் இருந்து வைகை, நெல்லை VB, எதிர்த்திசையில் தேஜஸ், நகர்கோயில் சென்னை VB தூத்துக்குடியில் இருந்து ரயில் விட்டால் இந்த நேரங்களில் ஒன்றில்தான் விடவேண்டும் ஏதோ ஓர் ரயிலில் மதுரை to சென்னை கூட்டம் பாதிக்கப்படும் மாறாக இரண்டு VB ரயில்களையும் கோவில்பட்டியில் பிடிக்க தூத்துக்குடி to கோவில்பட்டி ரயில் இயக்கினால் நல்லது தூத்துக்குடி இன்னும் பெரிய ஊர் ஆகும்போது தனி ரயில் கேட்கலாம்
மேலும் தொடரும் செய்திகள்
பதிவாகவில்லை

.gif)
ஹென்றிNov 5, 2025 - 06:54:14 PM | Posted IP 162.1*****