» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 3:43:46 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
- முதல் அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். இந்த பூங்கா, விண்வெளி துறைக்குத் தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- இரண்டாவது அறிவிப்பு: கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும். அந்த நிறுவனம் மூலம், கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
- மூன்றாவது அறிவிப்பு: முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவினத்தில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும்.
- நான்காவது அறிவிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
பதிவாகவில்லை
சண்முகம்Aug 5, 2025 - 10:49:10 PM | Posted IP 162.1*****