» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடியில் கோளரங்கம் - அறிவியல் பூங்கா: மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்!

திங்கள் 14, மார்ச் 2022 3:34:53 PM (IST)



தூத்துக்குடியில் அறிவியல் பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்காவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக பார்வையிட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தமிழ்ச்சாலை பகுதியில் ரூ.57.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா, கோளரங்கம் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த பூங்காவை பார்வையிட இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவியர் உற்சாகமாக பார்வையிட்டனர். 

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர். மேலும் பூங்காக்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடந்தது. மாணவ மாணவியருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இந்த பூங்காவில் போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, மானுடவியல் பூங்கா மற்றும் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறியீடு அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பூங்காவில், கோளரங்கம் 4-டி காணொலி, 5.1 ஆடியோமற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மானுடவியல் பூங்காவில் இந்தியாவில் வாழ்ந்த 12 பூர்வகுடி இன மக்களின் கலாச்சாரம், தொழில்,வாழ்வியல் முறைகளும், ஐந்திணை நிலஅமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை மாணவ, மாணவியர் உற்சாகமாக கண்டு களித்தனர். 



நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, நகர் நல அலுவலர் அருண்குமார், உதவி ஆணையர்கள் பொறுப்பு சரவணன், சேகர், செயற்பொறியாளர் பிரின்ஸ், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

TUTY PEOPLEMar 25, 2022 - 03:07:52 PM | Posted IP 173.2*****

இந்த இடம் எங்கு உள்ளது. முகவரி தெளிவாக தெரியப்படுத்தவும்.

KARNARAJ RAMANATHANMar 14, 2022 - 09:11:01 PM | Posted IP 108.1*****

NEED OF THE CITY, ALTERNATE ENTERTAINMENT ARE ESSENTIAL FOR PEACEFUL LIFE. Planetorium TIMING, etc to be provided and shows to be maintained nd run properly for public usage. CENTRAL GOVENMENT is doing good job through smart city project

SUJAMar 14, 2022 - 06:04:48 PM | Posted IP 162.1*****

YES

Please Plant More Trees in this areaMar 14, 2022 - 05:19:43 PM | Posted IP 162.1*****

Full Traffic, more Dusts , No Trees still small growing .. Still a Little Pollution. Only way is to plant More Trees in this area to avoid pollution and heat

MASSMar 14, 2022 - 03:50:08 PM | Posted IP 162.1*****

waste of makkal money

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads



Thoothukudi Business Directory