» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓணம் விடுமுறை : தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:09:58 PM (IST)

boatstriketuty.jpg

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி மீனவர்கள் இன்றும் நாளையும் (ஆக.24 மற்றும் 25) தொழிலுக்குச் செல்லாமல் ஓய்வு எடுத்துள்ளனர். இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை ஓரமாகப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory