» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசின் அறநிலையத் துறை மாநிலக்குழு உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமனம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:07:29 PM (IST)

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மாநிலக்குழு உறுப்பினராக திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அர்ச்சனா கல்பாத்தி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மாநிலக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடித்த 'பிகில்', 'கோட்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேலுள்ள திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து பெயர்ப்பட்டியல் அளிப்பதற்காக மாநிலக்குழு அமைத்து அரசு ஆணையிடுகிறது.
குழு உறுப்பினர்கள் விவரம்:
தலைவர்: தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் (பொம்மபுரம் ஆதீனம், மயிலம்)
துணைத் தலைவர்: டாக்டர் கே. ராமநாதன் (ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி)
உறுப்பினர்கள்:
அர்ச்சனா கல்பாத்தி அகோரம் (திரைப்படத் தயாரிப்பாளர்)
ப. ரா. சம்பத், இ.ஆ.ப. (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி)
மா. சுமதி (எ) சுமதிஸ்ரீ
த. வேல்முருகன்
பதவி வழி உறுப்பினர் / செயலர்: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:03:00 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:22:37 PM (IST)

தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம்: தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:05:25 PM (IST)

மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடர வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:44:57 AM (IST)

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)


