» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வகுப்பறையில் தலைமை ஆசிரியை மீது தாக்குதல்: இடைநிலை ஆசிரியை சஸ்பெண்ட்!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:12:19 AM (IST)

கரூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு முன்னிலையிலேயே தலைமை ஆசிரியையைத் தாக்கிய இடைநிலை ஆசிரியையை பணி இடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் நண்டாங்கோவிலில் செயல்பட்டு வரும் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் புவனா என்பவரும், இடைநிலை ஆசிரியராகக் கலைமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் கலைமதி சரியாகப் பணியாற்றவில்லை எனக் கூறி, தலைமை ஆசிரியை புவனா கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இடைநிலை ஆசிரியை கலைமதி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்னிலையிலேயே தலைமை ஆசிரியை புவனாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

மாணவர்கள் கண்முன்னே நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு ஆசிரியை தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்டக் கல்வி அலுவலர், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியையை வகுப்பறையில் வைத்துத் தாக்கிய குற்றத்திற்காக இடைநிலை ஆசிரியை கலைமதியை அதிரடியாகப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory