» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் நிர்மல் குமார் அநாகரிக பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:27:07 PM (IST)
பொறுப்பின் கண்ணியம் மறந்து அநாகரிகமாகப் பேசி வரும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாகப் பொறுப்பிற்கு வந்த தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார், அறத்திற்குப் புறம்பாக தொடர்ந்து அநாகரிகமான முறையில் பேசி வருகிறார்.தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மேற்கொண்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பாதுகாப்புக்கான நடைபயணத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.
அதேபோல், மக்களால் தேர்வு செய்யப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் பணியாற்றிய என்னைப் பற்றியும், கீதா ஜீவன் பற்றியும் அவதூறாகவும் அநாகரிகமாகவும் உரையாற்றியுள்ளார். தனது சொந்தத் துறையான மின்சாரத் துறையில் ஏராளமான குளறுபடிகள் தினந்தோறும் ஏற்படுகிறது. மின்வெட்டு தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்போது மின்கட்டண கணக்கீட்டில் பெரும் தவறுகள் நடந்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள விவரத்தின்படி சுமார் 3.70 லட்சம் குடும்பங்கள் மின்கட்டண கணக்கீட்டு குளறுபடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். சுமார் 50 முதல் 75 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த குளறுபடியான கணக்கீடு முறையே இதற்குக் காரணமாகும்.
தனது சொந்தத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வக்கற்ற திறனற்ற அமைச்சர், 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் சேவை செய்து வரும் முன்னாள் அமைச்சர்களை மோசமான முறையில் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனது அநாகரிக பேச்சை அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


