» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)
தென்காசி நகராட்சியின் பாஜக பெண் கவுன்சிலர், குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி புலிக்குட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து கோபாலகிருஷ்ணன். இவரும், சென்னையில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாகக் கூறப்படும் சுனிதா (45) என்பவரும் காதலித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சுனிதா தென்காசி நகராட்சியின் 23-வது வார்டு பாஜக கவுன்சிலராகப் பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் தென்காசியில் உள்ள ஒரு திரையரங்கிற்குத் திரைப்படம் பார்க்கச் சென்றபோது, சுனிதாவுக்கும் அவரது மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனிதாவை, முத்து கோபாலகிருஷ்ணன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்களால் மனவிரக்தியில் இருந்த சுனிதா, நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் வைத்து வயலுக்குத் தெளிக்கும் களைக்கொல்லி நஞ்சைக் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முத்து கோபாலகிருஷ்ணன், உடனடியாகச் சுனிதாவை மீட்டுத் தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுனிதா நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தென்காசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


