» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 31, ஜூலை 2026 8:27:22 AM (IST)
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதை தொடர்ந்து, அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், வழக்கை ரத்து செய்து இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதேபோல், அவருக்கு ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். சுபாதேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாகச் சில விளக்கங்களைக் கேட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ். சுபாதேவி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


