» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூங்கிக் கொண்டிருப்பது யார்? - திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!

வியாழன் 30, ஜூலை 2026 3:45:30 PM (IST)

cmvijayStalin.jpg

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்குத் தவெக அரசு காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: "தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகளின் குரலுக்குத் 'தூங்குமூஞ்சி' தவெக அரசு செவிசாய்க்க மறுத்தால், மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்." என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தவெக அரசின் பதிலடி:

திமுகவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்து தவெக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில்: "மேக்கேதாட்டு அணை விவகாரம், 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல திமுக தலைமை உளறுகிறது. அப்படியெனில், தூங்கிக் கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதே?

தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும், தானே முதலமைச்சர் என்பது போலப் பேசுவதுதான் யதார்த்த உலகத்திலிருந்து மாறுபட்டு இருப்பது என்பதை திமுக தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம்போல ஆளே இல்லை. ஆட்சியில் இருந்தபோது சுறுசுறுப்பாக இயங்கியிருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை 'இன்ஆக்டிவ்' நிலைக்குத் தள்ளியிருக்க மாட்டார்களே!

யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும், பதவி வெறியிலும் திமுக பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். மேக்கேதாட்டு விவகாரம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த எந்தவொரு விவகாரத்திலும் தமிழக விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்கள் பாதிக்கப்படத் தவெக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

PiramanayagamJul 30, 2026 - 05:35:36 PM | Posted IP 162.1*****

Please correct the Anicut name Mehathathu Karnataka

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory