» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:10:56 PM (IST)

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை முதல்வர் அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது: "மேக்கேதாட்டு அணை கட்டத் தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகத்திற்குத் தேவை இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் அளித்த பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெருமளவில் கேள்விக்குறியாக்கியுள்ளது.
டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளக் காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும் தமிழ்நாட்டின் உரிமைகளை முதல்வர் அடகு வைத்துள்ளார்.
இப்பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒன்றிய அரசிடம் மேக்கேதாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலேயே நான் பேசியிருந்தேன். ஆனால் கர்நாடகத்தில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த 'சோஃபா மாடல்' முதல்வர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை."
இனியும் இப்பிரச்சனையில் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் அபாயம் உள்ளது என்றும், எனவே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க முதல்வர் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


