» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு!
திங்கள் 27, ஜூலை 2026 5:34:27 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 'தமிழ்நாடு நாள் விழா'வை முன்னிட்டுப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என மொத்தம் 6 மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாக, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் 'அன்பு பாலம்' மூலம் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மற்றும் தொண்டுச் செயல்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.8 லட்சம் மதிப்பிலான 5 பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. வித்யா, சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ரோஷன்பேகம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிந்து, தமிழ் வளர்ச்சித் துறைத் துணை இயக்குநர் பெ. இளங்கோ உட்படத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


