» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை மேயர் பிரியாவுக்கு மர்ம நபர் தொல்லை: காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
திங்கள் 27, ஜூலை 2026 4:23:21 PM (IST)
சமூக வலைத்தளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர் தொல்லை தருவதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
வேப்பேரியில் உள்ள சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்திற்கு நேரில் சென்ற மேயர் பிரியா, காவல் ஆணையர் அமல் ராஜைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து தனக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன் குறித்துப் அவதூறாகச் சித்தரித்துத் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத் தொலைபேசி எண்ணிற்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து அழைத்துப் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இதில் தொடர்புடைய அடையாளம் தெரியாத நபர்கள் மீது உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது புகாரில் மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.
மேயர் பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மேயரே நேரில் சென்று தொல்லை தருவதாகப் புகார் அளித்துள்ள சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


