» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு: சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம்!
திங்கள் 27, ஜூலை 2026 10:11:53 AM (IST)

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் குளித்தபோது மாயமான இரண்டு மாணவர்களும் பாறைக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் சென்று கடலில் குளித்தபோது, படகு கட்டுப்பாட்டை இழந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் இரு மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். மாயமான மாணவர்களைத் தேடும் பணி நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.இன்று காலை சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் ஆழ்கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தருவைகுளம் கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடலடிப் பாறைக்கு இடையே இரு மாணவர்களும் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாகச் சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
தகவலறிந்த தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறாய்விற்காக இருவரின் சடலங்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் இச்சம்பவம் குறித்து மரைன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தருவைகுளம் கிராம மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


