» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடலில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணியில் 60 மீனவர்கள் : கடற்கரையில் திரண்ட மக்கள்!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:45:00 PM (IST)

தூத்துக்குடி தருவைகுளம் அருகே கடலில் சுற்றிப் பார்க்கச் சென்ற சிறுவர்களின் படகு என்ஜின் பழுதானதால், பயத்தில் கடலில் குதித்து மாயமான 2 சிறுவர்களைத் தேடும் பணியில் 8 படகுகளுடன் 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகை எடுத்துக்கொண்டு, 16 வயதுடைய நண்பர்கள் 6 பேர் இன்று மதியம் 1.00 மணியளவில் கடலில் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் படகின் என்ஜின் திடீரெனப் பழுதாகி செயலிழந்தது . இதனால் பலத்த காற்றின் திசையை நோக்கிப் படகு ஆழ்கடலை நோக்கி அடித்துச் செல்லப்பட்டது. படகு ஆழ்கடலுக்குச் செல்வதைக் கண்டு பதற்றமடைந்த சிறுவர்களில் 4 பேர், நீந்தி கரைக்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் உடனடியாகக் கடலில் குதித்துள்ளனர்.
மீதமிருந்த சிறுவர்கள் படகை இயக்கி கரைக்குத் திரும்பி, கரையில் இருந்த மீனவர்களிடம் நடந்த சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விழித்துக்கொண்ட மீனவர்கள், மற்றொரு படகில் விரைந்து சென்று கடலில் தவித்த இரு சிறுவர்களைப் பத்திரமாக மீட்டனர். எனினும், கடலில் மூழ்கிய தருவைகுளத்தைச் சேர்ந்த சேவியர் மகன் ஜோசுவா மற்றும் முத்து மகன் மனோஜ் ஆகிய இரு சிறுவர்களும் மாயமாகியுள்ளனர்.
மாயமான இரு சிறுவர்களையும் மீட்கும் பணியில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 8 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் சோகத்துடன் கடற்கரையில் திரண்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)


