» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்பத் தகராறில் கொடூரம்: 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலங்களாக மீட்பு: போலீஸ் விசாரணை!
புதன் 22, ஜூலை 2026 10:23:10 AM (IST)
தருமபுரி அருகே மாயமான தாய், அவரது 3 குழந்தைகள் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி தோக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி அம்சா (35). மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6), மகன் குமரன் (3) ஆகியோர் கடந்த 19-ஆம் தேதி பிற்பகலில் வீட்டிலிருந்து திடீரென மாயமாகினர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், வீட்டிலிருந்து அரை கி.மீ. தொலைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள அம்சாவின் தந்தை நிலத்துக் கிணற்றில், அம்சா, அவரது குழந்தைகளின் சடலங்கள் மிதப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த அதியமான்கோட்டை காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் அம்சா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
மீட்கப்பட்ட உடல்களில் கற்கள் கட்டப்பட்டிருந்ததால், குழந்தைகளுடன் அம்சா கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 5:44:54 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
புதன் 22, ஜூலை 2026 5:04:58 PM (IST)

அங்கன்வாடி முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
புதன் 22, ஜூலை 2026 4:42:01 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம்: நாடாளுமன்றப் போராட்டத்திற்கு ஆதரவு
புதன் 22, ஜூலை 2026 3:58:41 PM (IST)


