» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: ஒருவர் கைது
புதன் 22, ஜூலை 2026 8:07:45 AM (IST)

திருச்செந்தூர் அருகே இலங்கைக்குக் கடத்து வதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலைச் செந்தூர் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குப் படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கீதன், ராமர், தலைமைக்காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் செந்தூர் நகர் கடற்கரைச் சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று (22.07.2026) அதிகாலை 04:00 மணியளவில் அப்பகுதியில் சோதனையிட்ட போது, லோடு வேனில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட தலா 35 கிலோ எடை கொண்ட 79 மூட்டை பீடி இலைகள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேசச் சந்தை மதிப்புச் சுமார் ரூ.1 கோடி ஆகும்.
இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குரும்பூர் பழைய தெருவைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லோடு வேன், கைது செய்யப்பட்ட சூர்யா ஆகியோர் மேல் நடவடிக்கைக்காகச் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 5:44:54 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
புதன் 22, ஜூலை 2026 5:04:58 PM (IST)

அங்கன்வாடி முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
புதன் 22, ஜூலை 2026 4:42:01 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம்: நாடாளுமன்றப் போராட்டத்திற்கு ஆதரவு
புதன் 22, ஜூலை 2026 3:58:41 PM (IST)


