» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!

செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

தமிழ்நாட்டையே உலுக்கிய நெல்லை வீரவநல்லூர் அருகே இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கடைசி நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இக் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்திற்கும், பெருமாள்பாண்டியன் குடும்பத்திற்கும் இடையே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகப் பல ஆண்டுகளாக முன்விரோதம் நீடித்து வருகிறது.

இப் பகையின் தொடர்ச்சியாகக் கடந்த 2-ஆம் தேதி சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து, தனது சிறுவர்களான சின்னத்துரை, ஜெயராஜ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மாதுடையார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்மக் கும்பல், வாகனம் மீது காரை மோதி காளிமுத்துவைக் கொடூரமாகக் கொலை செய்தது. கார் மோதிய விபத்தில் சிறுவன் ஜெயராஜ் உயிரிழந்தான்; மற்றொரு சிறுவன் சின்னத்துரை வெட்டுக் காயங்களுடன் தப்பினான்.

தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக மகேஷ் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, வனப்பகுதியில் பதுங்கியிருந்த 12-வது குற்றவாளியான கிருஷ்ணன் (எ) அஜித்தைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு 14 பேர் கைதான நிலையிலும், 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலும் தொடர் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்நிலையில் இக்கொலை வழக்கின் கடைசி குற்றவாளியான கந்தசாமி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இக் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory