» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுயநலத்திற்காக ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: தமிழிசை பேட்டி!

சனி 4, ஜூலை 2026 10:59:34 AM (IST)

சுயநலத்திற்காகத் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்யும் நபர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவொற்றியூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது: "தவெகவினர் தங்களை ஒரு தூய சக்தி என்று கூறிக்கொள்கிறார்கள், அதனை அவர்கள் எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம் கூட இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்வதால் எவ்வளவு பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சுமார் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றி பெற்ற விஜயபாஸ்கர் போன்றவர்கள் எல்லாம், தங்களுக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களைச் சிறிதும் மதிக்காமல் தங்களது சுயநலத்திற்காகப் பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள். இவ்வாறு சுயநலத்திற்காக ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஜனநாயகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

பணத்தைக் கொடுத்து வேறொரு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு எப்போதுமே இல்லை. தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜகவிற்கு எந்தவிதமான பங்கும் இல்லை" என்று தமிழிசை சௌந்தரராஜன் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory