» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)

கோவையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. எஸ். ராஜனுக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், மருத்துவத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. எஸ். ராஜனுக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் நியூ சித்தாபுதூரில் அமைந்துள்ள எல்சி மருத்துவமனையின் தலைவரான டாக்டர் பி.எஸ். ராஜன், குடலியல் மற்றும் லாபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைத் துறையில் சர்வதேச அளவிலான உயரிய மருத்துவத் தகுதிகளைப் பெற்றவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவை, நோயாளிகளிடம் காட்டும் மனிதநேயம், சுகாதாரம் மற்றும் நவீன அறுவை சிகிச்சைத் துறையின் மேம்பாட்டிற்கான பங்களிப்பு மற்றும் இளம் மருத்துவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக அசோசியேஷன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் விஜிஎம் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து இவ்விருதை வழங்கியுள்ளன.
கோவை சிங்காநல்லூரில் உள்ள விஜிஎம் மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தற்போதைய மருத்துவத் துறை இணை சுகாதாரப் பணிகள் இயக்குநர் டாக்டர் சுமதி கலந்துகொண்டு டாக்டர் பி. எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் மருத்துவத் துறையின் முன்னணி நிபுணர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், டாக்டர் வி. ஜி. மோகன் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின் நன்றியுரை ஆற்றிய டாக்டர் பி. எஸ். ராஜன், "இந்த உயரிய அங்கீகாரத்தை எனது நேர்மையான மருத்துவப் பயணத்திற்கு எப்போதும் அசைக்க முடியாத ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கி வரும் எனது நோயாளிகள், சக மருத்துவர்கள், குடும்பத்தினர் மற்றும் எல்சி மருத்துவமனையின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் முழு மனதுடன் அர்ப்பணிக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 1, ஜூலை 2026 8:32:01 PM (IST)

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)


