» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக பெண் நிர்வாகியிடம் செல்போன் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 27, ஜூன் 2026 10:42:16 AM (IST)
திருச்செந்தூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு பெண் உறுப்பினரிடம் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இராஜாமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் ரோகிணி (35). இவர் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பில் இருந்து வருகிறார். நேற்று ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையின் அருகே நின்றுகொண்டு, தனது தம்பியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த சாம்சங் செல்போனைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணியின் தம்பி, உடனடியாக அந்த நபரைத் துரத்திச் சென்றார். எனினும், அந்த நபர் அப்பகுதியில் உள்ள தெருக்களுக்குள் ஓடி மறைந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
பறிபோன செல்போனின் மதிப்பு சுமார் ரூ.10,000 என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ரோகிணி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மரியாதையுடன் பாக்யராஜ் இறுதிப் பயணம் : தமிழக முதல்வர் விஜய் அறிவிப்பு!
சனி 27, ஜூன் 2026 12:46:05 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு: பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்த 2 எம்எல்ஏக்கள்
சனி 27, ஜூன் 2026 12:40:00 PM (IST)

மாணவர் அடையாள அட்டையில் சாதி, மதம் இடம்பெறக் கூடாது: கீதா ஜீவன் வலியுறுத்தல்!
சனி 27, ஜூன் 2026 12:18:08 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல் காந்தி புதிய இயக்கம்: காங்கிரஸ் தலைவர் பேட்டி
சனி 27, ஜூன் 2026 11:31:14 AM (IST)

பாக்யராஜ் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 10:47:29 AM (IST)


