» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது அரசுப் பேருந்து மோதி பள்ளி ஆசிரியை - மகள் உயிரிழப்பு - கணவர் படுகாயம்!
வெள்ளி 19, ஜூன் 2026 7:41:29 AM (IST)
கோவில்பட்டியில் அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் அவரது 9 வயது மகள் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி வளர்மதி (36), கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர்களது மகள் அஸ்விகா (9), பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை, ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாகனம் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் ராஜீவ் நகர் 4-ஆவது தெரு சந்திப்பு அருகே சென்றபோது, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து முடுக்கலாங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் நிலைதடுமாறி விழுந்த வளர்மதி மற்றும் சிறுமி அஸ்விகா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். ரமேஷ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜகநாதன் மற்றும் போலீசார், உயிரிழந்த தாய், மகளின் சடலங்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த ரமேஷை மீட்டு அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரான பீக்கிலிபட்டியைச் சேர்ந்த செல்வம் (29) என்பவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவா? சி. மகேந்திரன் தவெக-வில் இணைந்ததால் சிபிஐ பரபரப்பு அறிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:44:00 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)


