» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:34:25 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையைத் தொடர்ந்து, 2 சார்பதிவாளர்கள் உட்பட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் (பொறுப்பு) பிரபாகர் (37), அலுவலக உதவியாளர் பால்ராஜ் (56), செல்வா வெங்கடப்பிரியா (35), சீதாலட்சுமி (40) மற்றும் ஆவண எழுத்தர்கள் அய்யம்பெருமாள் (57), பாலமுருகன் (56) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.55,500 ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாகத் தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் செல்வி (40) மற்றும் அனிதா (47) ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அடுத்தகட்ட மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரு மொழிக் கொள்கை தொடரும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தமிழக ஆளுநர் உரை!
வியாழன் 18, ஜூன் 2026 11:12:19 AM (IST)

வாயை திறங்க சிஎம்!- கருப்பு பேட்ஜ் அணிந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 10:37:59 AM (IST)

சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 10:32:12 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: முதல்வர் விஜய்யுடன் ஹூண்டாய் அதிகாரிகள் ஆலோசனை!
வியாழன் 18, ஜூன் 2026 8:41:21 AM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)



SundarajanJun 16, 2026 - 10:04:16 AM | Posted IP 104.2*****