» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓமனில் தூத்துக்குடி மாலுமி மரணம்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து கீதாஜீவன் ஆறுதல்..!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:03:09 AM (IST)

ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமியின் உடலைத் தாயகம் கொண்டுவரத் தேவையான அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளையும் கனிமொழி எம்பி மேற்கொண்டு வருவதாகத் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்தார். அண்மையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், போர்க் சூழல் காரணமாக உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் அவர் கப்பலிலேயே உயிரிழந்துள்ளார்.
கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மைத் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும், கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சரோபின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மேலும், உடலை மீட்டுத் தரக் கோரி தூத்துக்குடி எம்பி கனிமொழியிடமும் அவர் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்பி மத்திய வெளியுறவுத் துறை மூலம் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து, நிஷாந்தின் உடல் கப்பலிலிருந்து ஓமன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கீதாஜீவன் நேரில் ஆறுதல்:
இந்தச் சூழ்நிலையில், குரூஸ்புரம் பகுதியில் உள்ள நிஷாந்தின் வீட்டிற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன் நேற்று நேரில் சென்று, அவரது மனைவி சரோபின் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உயிரிழந்த மாலுமியின் மனைவிக்கு அரசு வேலையும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தமிழக அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும். உடலைத் தூத்துக்குடிக்குக் கொண்டு வரக் கனிமொழி எம்பி தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" எனக் குறிப்பிட்டார்.
சக ஊழியர்களின் அதிர்ச்சி வீடியோ:
இதற்கிடையே, நிஷாந்துடன் கப்பலில் பணியாற்றிய சக ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், "உயிரிழந்த நிஷாந்தின் உடலைக் கப்பல் நிறுவனம் முறையாகக் குளிரூட்டப்பட்ட வசதியில் (Freezer) வைத்துப் பாதுகாக்கவில்லை. உடல் கெட்டுப்போகாமல் இருக்கக் குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களையே சுற்றிலும் அடுக்கி வைத்துள்ளோம்" எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு உடலை விரைவாகச் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரு மொழிக் கொள்கை தொடரும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: தமிழக ஆளுநர் உரை!
வியாழன் 18, ஜூன் 2026 11:12:19 AM (IST)

வாயை திறங்க சிஎம்!- கருப்பு பேட்ஜ் அணிந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முழக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 10:37:59 AM (IST)

சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 10:32:12 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்: முதல்வர் விஜய்யுடன் ஹூண்டாய் அதிகாரிகள் ஆலோசனை!
வியாழன் 18, ஜூன் 2026 8:41:21 AM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

கிரீன் காப்பர் பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சி: முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ திடீர் சந்திப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 8:05:01 AM (IST)


