» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது: அதிமுக வழக்கு!
திங்கள் 15, ஜூன் 2026 4:39:25 PM (IST)
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுகவின் சட்டப்பேரவைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கட்சித் தாவல் மற்றும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக இருந்த 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சட்டமன்றச் சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது. எனவே, சபாநாயகரின் இந்த முடிவின் அடிப்படையில் அந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் நாளை மறுநாள் (ஜூன் 17) விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த 4 தொகுதிகளின் விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

மாணவர்கள் விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
திங்கள் 15, ஜூன் 2026 5:06:31 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 3:31:21 PM (IST)

இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு..!
திங்கள் 15, ஜூன் 2026 3:14:03 PM (IST)


