» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: கனிமொழி எம்பி கண்டனம்

செவ்வாய் 2, ஜூன் 2026 10:40:32 AM (IST)

தவெக நிர்வாகிகள் இருவர் இளம்பெண்ணை ஏமாற்றிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரது நண்பரும், தவெக நிர்வாகியுமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவருடன் சேர்ந்து, இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி, அந்தப் பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவர்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனிமொழி எம்.பி. கண்டனம்
    
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி. தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:    "ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதல்வர் விஜய் செயல்படப் போவது எப்போது?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

இதுJun 2, 2026 - 11:22:28 AM | Posted IP 162.1*****

இந்த எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் வாய் திறக்கும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பல் இளித்துட்டு ஊர் சுற்ற போய்விடும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory